ஒரு முறை உடலில் வந்துவிட்டால், அப்படியே அகலாமல் தங்கிவிடும் அபாய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமான அமைப்பை மேம்படுத்தி, கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சி இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
கிலோய் சாறு குடிப்பதன் மூலம், பல நோய்களின் அபாயம் பெருமளவில் குறைகிறது. இதன் சாற்றை தொடர்ந்து குடிப்பதால், சர்க்கரை கட்டுக்குள் வரும்.
பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.
முருங்கை இலையில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். இதன் இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நீரிழிவு சிகிச்சையில் உதவுகிறது. நெல்லிக்காயை பச்சையாகவும், அதன் சாறு எடுத்தும் உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்துகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.