உடல் பருமன், பெரும்பாலானோரின் பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடல் கொழுப்பை எரித்து, உடல் எடை குறைய உதவும் சிறந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தானியங்களை முளைகட்டி பயன்படுத்துவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. இதனால் உடல் எடையை சிறப்பாக குறைக்கலாம்.
புரதச்சத்து நிறைந்த பன்னீர், உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக இருக்கும். ஏனெனில் புரதச்சத்து இல்லாமல் எடை இழப்பு சாத்தியம் இல்லை.
சிறந்த டீ டாக்ஸ் பானமாக இருக்கும் ஆப்பிள் சைடர் வினிகர் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது.
வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், சத்து நிறைந்த பழங்கள், எடை இழக்க விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம்.
நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு, மிகச் சிறந்த உணவாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)