நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முளை கட்டிய பயறுகள் சுகர் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. சர்க்கரை நோயாளிகள் அவ்வப்ப்போது இவற்றை உட்கொள்ளலாம்.
ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, நெல்லிக்காய், நாவல் பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீரிழிவு எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறன.
வெந்தயக்கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகள், பாகற்காய், ப்ரோக்கோலி போன்ற காய்கள் சுகர் நோயாளிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. இவற்றில் உணவு நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
முழு தானியங்களில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இந்த இரண்டு கூறுகளும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கின்றன.
ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைத்து ஆரொக்கியத்தை மேம்படுத்தும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.