இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பலரை பாடாய் படுத்தும் நோயாக மாறியுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு ஆரோக்கியமான டயட் உணவை பற்றி இங்கே காணலாம். இதை பின்பற்றினால் கண்டிப்பாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
சரிவிகித உணவை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
நீரிழிவு நோயைத் தோற்கடிக்க, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதற்கு கோழி, மீன் மற்றும் டோஃபு போன்ற மெலிந்த இறைச்சியின் உட்கொள்ளலை அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் அவகேடோ, பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டிப்படுத்த இனிப்புப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிஸ்கட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகள், சர்க்கரை பானங்கள், குளிர் பானங்கள், இனிப்பு பானங்கள், துரித உணவுகள்,ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சிகளுடன் தினசரி நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை நன்மை பயக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.