நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.
காலையில் அரிசியில் செய்த தோசைக்கு பதிலாக பாசிப்பருப்பில் செய்த தோசை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்கு பதிலாக, கோதுமை ரவை கிச்சடியாக எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயக் கீரையுடன் சேர்த்து ரொட்டியாக செய்து எடுத்துக் கொள்வது நல்லது.
பாலக் கீரையை உணவில் சேர்த்துகொள்ளவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்தது.
நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸில் கேரட், பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட நிறைய காய்கறிகள் சேர்த்து மசாலா ஓட்ஸாக செய்து சாப்பிடலாம்.
வேகவைத்த கொண்டைக்கடலையோடு பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.