அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவு உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
உடல் பருமன் இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும், மேலும் நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை பராமரிக்க உதவும் கோலின் என்ற சத்தும் அவற்றில் உள்ளது.
காலை உணவில் புரோட்டீன் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள பன்னீர் சேர்த்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இட்லி, தோசையை சாம்பார் -சட்னியுடன் சாப்பிடுவதால் புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஏராளமாக கிடைக்கும் இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவு.
தயிரில் கால்ஷியமுடன் அதிக புரதமும் குறைவான சர்க்கரையும் உள்ளது. புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஓட்ஸ் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணர வைக்கும்.
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளதால் காலை உணவில் ஊட்டச்சத்தை சேர்ப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.
உலர் பழங்கள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால், நாள் வயிறு நிறைவாக உணர வைக்கும்