தினமும் காலையில் ஓடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இதனையே வழக்கமாக்கி கொள்பவர்கள் பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து விடுபடுகின்றனர்.
தினமும் ஜாகிங் போவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இது இதயம் சம்பந்தப்பட்ட நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
ஜாகிங் செய்வதால் உடலில் உள்ள அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைகின்றன.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு சரியான தேர்வு.
ஓடுவதால் என்டார்பின்கள் (Hormone) வெளிப்படுகிறது. இதன் மூலம் மன அழுத்தம், பதட்டம், மனசோர்வை குறைக்க முடியும்.
தினமும் ஜாகிங் செய்வதால் கால் தசைகள் பலப்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த தசை மண்டலத்தையே மேம்படுத்துகிறது.
தினமும் ஜாகிங் செய்வதால் எலும்புகள் வலுப்பெறுகின்றன. ஜாக்கிங் செய்வதால் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்த முடியும் என்கின்றனர்
தினமும் ஓடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தொற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.