தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.
கறிவேப்பிலை உப்புமா மற்றும் காய்கறி உட்பட பல உணவுகளில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் அற்புத பலன்களை பற்றி அறிந்துக்கொள்வோம்.
கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கறிவேப்பிலையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மட்டுமின்றி அல்சைமர் போன்ற நிலைகளைத் தடுக்கும் கூறுகளும் உள்ளன.
கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
நீங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், கறிவேப்பிலை இதற்கு உதவியாக இருக்கும். கறிவேப்பிலை நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.