கொத்தமல்லித் தழையைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான நன்மைகளைக் கொண்டவை ஆகும்
வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன
கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அதனைக் குடித்து வந்தால் உடலின் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்
முதல் இரவே 5 தேக்கரண்டி அளவிலான கொத்தமல்லி விதைகளை ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்
வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரைக் குடித்து வந்தால், உடல் எடை சட்டென்று குறையும்
கல்லீரல் செயல்பாடு மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் கொத்தமல்லி நீர் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்க உதவுகிறது
உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய் சுழற்சி சிறப்பாக நடைபெற இது உதவும்
வாரத்தில் நான்கு நாட்களாவது கொத்தமல்லி நீரை குடித்து வந்தால், எலும்பு வலுப்படும், நோய்கள் வராது