பொட்டாசியம் நிறைந்த உணவு உடல் பருமனை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வாழைப்பழம் பொட்டாஷியம் நிறைந்த உணவுகளில் முதன்மையானது. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.
ஆளி விதைகளில் பொட்டாஷியம் தவிர ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் நிறைந்துள்ளவை. அவை எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.
மீனில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது எடை இழப்பிற்கு மட்டுமல்லாது மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
ஆரோக்கியமான எடை இழப்புக்கு கொத்துக்கடலை உண்பது சிறந்த வழி. இதில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது
ராஜ்மாவில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 35% பூர்த்தியாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.