உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் மாரடைப்பு, இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவை வர வாய்ப்புள்ளது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில மூலிகைகள் பற்றி இங்கே காணலாம்.
மருதுவ குணங்கள் நிறைந்த துளசியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கூறு நரம்புகளில் படியும் கொழுப்பை கரைத்து சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும்.
தினமும் காலையில் இலவங்கப்பட்டை டீ குடிப்பது அதிக கலோரிகளை எரிக்கவும், கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
வெந்தயத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.