உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய பழங்கள் பற்றி இங்கே காணலாம்.
தர்பூசணியில் மிக அதிக அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கும்.
சப்போட்டா நீழிரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதோடு இதன் இனிப்பு வேகமாக இரத்தத்தில் கலக்கிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. இதன் ஜிஐ அளவும் அதிகம். நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அளவு மிக அதிகமாக உள்ள மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இது உடனடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றது.
திராட்சையில் அதிக அளவில் வைட்டமின் சி இருந்தாலும், இதில் சர்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால் இதை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
சுவையான பலாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. இது சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும்.
மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.