ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி உணவு தேர்வுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
ஆண்கள் பாலியல் பிரச்சனைகளையும் விந்தணு எண்ணிக்கை குறைபாட்டையும் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
அளவிற்கு அதிக சோயா உணவுகள், விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். ஏனெனில், இதில், உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை தரம் இரண்டு குறையும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ரெடி டு ஈட் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளில், நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஜீனோஎஸ்ட்ரோஜன்களாக செயல்பட்டு, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும்.
டிரான்ஸ் கொழுப்பு உள்ள துரித உணவுகள் மற்றும், ஐஸ்க்ரீம் பேஸ்ரி வகைகள் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும்.
உடல் பருமன், மன அழுத்தம், ஆகியவையும் விந்தணு குறைய காரணமாகின்றன. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரோக்கியமான உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பது நல்லது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.