ஆஸ்டியோபோரோசிஸ்

எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.

Vidya Gopalakrishnan
Mar 13,2023
';

வைட்டமின் D

எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிகவும் அவசியம்.

';

கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, நமது எலும்புகளுக்கு கேடு விளைவிக்கும். எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள் பற்றி ஊட்டசத்து நிபுணர்கள் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.

';

அதிக உப்பு

அதிக அளவில் உப்பு உட்கொள்வதால், அதில் உள்ள சோடியம் உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்கிறது.

';

அதிக சர்க்கரை

சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் நிலையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத போது, ​​​​எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.

';

காபி

காபியில் காஃபின் உள்ள நிலையில், காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது.

';

சோடா

அதிகமாக சோடா குடித்தால், குடிப்பதால், உடலில் உள்ள கால்ஷியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழந்துவிடும். பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.

';

சிக்கன்

விலங்கு புரதங்கள் இரத்தத்தை சிறிது அமிலமாக்குகின்றன. இரத்தத்தில் pH-ன் மாற்றத்திற்கு உடல் எதிர்வினையாற்றும் போது, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அதனை சமன்படுத்துகிறது.

';

மது பானம்

மது அருந்துவது எலும்பு அடர்த்தியை குறைக்கும் என்பதால், மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் அதனை குறைக்க முயற்சிக்கவும்.

';

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும். அதனால் அதிக எச்சரிக்கை தேவை.

';

VIEW ALL

Read Next Story