ஆயுர்வேதத்தின் படி மூலிகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆவரம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மிகவும் பிரசித்தி பெற்ற பானமாகும்
ஆவரம் பூ பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உடலை தூய்மைப்படுத்தும் பொருட்களில் ஆவரம்பூ அதிகம் இடம்பெற்றிருக்கிறது
சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு
உணவாகவும் ஆவரம்பூவை எடுத்துக் கொள்ளலாம். வல்லாரை தொக்கைப் போலவே, ஆவரம்பூ தொக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
காயவைத்த ஆவரம்பூவை பொடியாக செய்து வைத்துக் கொண்டு, அதை வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் பல நோய்கள் குணமாகும்
ஆவரம்பூவின் சாற்றை எடுத்து வெல்லத்துடன் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியம் வலுப்படும், நோய்கள் அண்டாது
அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆவரம்பு உச்சந்தலையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியத்தை நிரந்தரமாக்குகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை