வாக்கிங்

இரவு நேரம் டின்னருக்கு பின் 10 நிமிட வாக்கிங் போவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

Vidya Gopalakrishnan
Jul 25,2023
';

ஜீரணம்

இரவு நேர வாக்கிங் மூலம் ஜீரணத்திற்கு தேவையான என்ஜைம்கள் உடலில் உற்பத்தி ஆகி, சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் அடையும்.

';

மலச்சிக்கல்

இரவு நேர வாக்கிங் மூலம் செரிமானம் மேம்படுவதால், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

';

மெடபாலிசம்

சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது மெடபாலிசம் அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

';

புத்துணர்ச்சி

இரவு நேர வாக்கிங் மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

';

நல்ல தூக்கம்

இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

இரவு நேர வாக்கிங் மூலம் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

';

உடல் எடை

தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக பசியை கட்டுப்படுத்த முடியும். 15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வு கட்டுப்படும். உடல் எடை குறையும்.

';

ரத்த சர்க்கரை

நடக்கும் போது ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை உடல் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

';

VIEW ALL

Read Next Story