லைகொபீன் என்னும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த தக்காளி குறைந்த அளவு கலோரி கொண்டது. மேலும் இதில் நீர்ச்சத்து மிகவும் அதிகம்.
தக்காளியில் வைடமின் சி, பொட்டாசியம், போலேட், வைட்டமின் கே போன்ற இதர ஊட்டச்சத்துகள் உள்ளன.
பீட்டா கரோடின் , வைட்டமின் சி அதிகம் உள்ள தக்காளி , புற்று நோயை உண்டாக்கும் ப்ரீ ரேடிகல் வளர்ச்சியைத் தடுக்கிறது.
தக்காளியில் உள்ள போலேட் சத்து கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள சிசுவிற்கு நரம்பு குழாய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
தக்காளியில் உள்ள உயர் வைட்டமின் சத்து காரணமாக இரத்த அழுத்த நிலையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு தக்காளி மிகவும் உகந்தது.
நார்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் அற்ற சீரான குடல் இயக்கத்திற்கு தக்காளி உதவுகிறது.
தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்களைப் பாதுகாத்து, கண் பார்வை கூர்மையை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும் கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான கூந்தல் மற்றும் நக வளர்ச்சிக்கும் தக்காளி பயன்படுகிறது.