பன்னீர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று.
பன்னீரில் புரதச்சத்து மட்டுமல்லாது, விட்டமின் ஏ, விட்டமின் பி2, விட்டமின் பி6, கால்சியம் மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளது.
பன்னீரில் உள்ள பி விட்டமின்கள், குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரித்து, நினைவாற்றலையும் மேம்படுத்த உதவுகிறது.
பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் காணப்படுவதால், கீல்வாதம் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
புரதச்சத்து நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, பணி சிறந்த உணவு.
கால்சியம் நிறைந்துள்ள பன்னீர், பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது.
பன்னீர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பு உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.