தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது என்று பிரபல பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டிருக்க கூடும்.
ஆப்பிளில் அதிக பிளவனாய்டுகள் இருப்பதால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை 35% ஆக குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் மூளையை அல்சைமர் மற்றும் நரம்பியல் கடத்திகள் நோய்களில் இருந்து காக்கிறது.
ஆப்பிளில் உள்ள அபிஜெனின், ஜெனிஸ்டீன் மற்றும் பிற பாலிஃபீனால்கள் சருமத்தை சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் அழற்சி மற்றும் கருப்பு - வெள்ளை புள்ளிகளிலிருந்து பாதுகாக்கின்றன.
தொடர்ந்து 24 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டு வந்தால் 17% புற்றுநோய் கட்டிகள் அழியும்.
ஒரு கப் ஆப்பிள் துண்டுகளில் 2.6 கிராம் நார்ச்சத்துக்கள் காணப்படுவதோடு திருப்தியான உணர்வை தருகிறது. இதனால் பசி குறைந்து உடல் எடை குறைகிறது.
ஒரு நாளைக்கு 1-2 ஆப்பிள்களை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 28% ஆக குறைகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், நாள்பட்ட வீக்கம், மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் குவெர்செடின் போன்றவை உள்ளதால், மாகுலர் சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் குவெர்செடின் போன்றவை உள்ளதால், மாகுலர் சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.