ஒரு மாதத்திற்கு டீ காபி பழக்கத்தை கைவிட்டால், உடலில் வியக்கத்தக்க மாற்றம் தோன்றும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒரு மாதம் டீ காபி அருந்தாமல் இருந்தால் செரிமான மண்டலம் வலுவடைந்து, உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.
பால் சர்க்கரை கலந்த டீ - காபியில் கலோரி அதிகம் உள்ளது. இதனை கைவிட்டால், நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவு பெருமளவு குறையும்
டீ காபியில் உள்ள காபின், தூக்கத்தை கெடுத்து விடும். இதனை கை விடுவதால் இரவில் ஆழ்ந்து தூங்கலாம்.
டீ காபி குடிக்காமல் இருந்தால் மன அழுத்தம் பெருமளவு குறையும் என்கின்றனர் வல்லுனர்கள்.
டீ காபி அருந்தாமல் இருந்தால் உடலில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.