டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும்.
அதிகப்படியான டீ குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
அதிக டீ குடிப்பதால், கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல் ஆகியவை உண்டாகும்
அதிக அளவில் டீ குடிப்பதால், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம்
டீயில் உள்ள டோனிக் அமிலம் உடல் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து ரத்த சோகை ஏற்படுத்துகிறது
டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாக அமைந்துவிடலாம்