நாம் அனைவரும் உடல் பருமன் இல்லாமல் ஆரோக்கியமான எடையுடன் வாழ ஆசைப்படுகிறோம்.
சிலருக்கு உடற்பயிற்சி செய்து எடையை குறைக்க நேரம் இருப்பதில்லை. அவர்களுக்கான டிப்ஸ் இதோ
கொழுப்பை உடனடியாக கரைக்கும் புரதச்சத்தை (Protein) அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடை இழப்புக்கும் (Weight Loss) ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் போதுமான தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும்.
சரியான தூக்கம் சரியான செரிமானத்தை உறுதி செய்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது
ஒரே முறையில் அதிக உணவை உட்கொள்வதற்கு பதிலாக அடிக்கடி சிறிய அளவுகளில் உணவை உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும் சீரான செரிமானத்திற்கும் உதவும்
நமது உணவில் ஆரோக்கியமான சத்தான ஊட்டச்சத்து மிக்க விஷயங்கள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவை நம் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். ஆகையால் இவற்றை குறைக்க கண்டிப்பாக தினமும் யோகா, தியானம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
உணவை நன்றாக மென்று சாப்பிடுவதே சரியான செரிமானத்திற்கான முதல் படியாகும். ஆகையால், உணவு உட்கொள்ளும்போது அவசரம் காட்டாமல் மெதுவாக மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.