உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது அதன் உணவு மூலமாகவும், சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் அதனை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. அனைத்து ஊட்டச்சத்துக்களைப் போலவே, வைட்டமின்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். விட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது நல்லதல்ல. குறைபாடு காரணமாக பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, அதிக அளவில் சாப்பிட்டாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் வடிவில் உட்கொள்ளும்போது, அதிகப்படியான அளவினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
வைட்டமின் நச்சுத்தன்மை (Vitamin Toxicity) என்றால் என்ன?
ஹைப்பர்வைட்டமினோசிஸ் (Hypervitaminosis) என்றும் அழைக்கப்படும், வைட்டமின் நச்சுத்தன்மை என்பது மிகவும் அரிதான ஆனால் அபாயகரமான நிலையாகும். இது உங்கள் உடலில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும் போது ஏற்படும். வைட்டமின் டி நச்சுத்தன்மையின் முக்கிய பாதிப்பு, உங்கள் இரத்தத்தில் கால்சியம் அதிக அளவில் சேர்வதால், குமட்டல் மற்றும் வாந்தி, பலவீனம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவற்றை ஏற்படுத்தும் ஹைபர்கால்சீமியா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி நச்சுத்தன்மை எலும்பு மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது, இதனால் உடல் வலி மற்றும் கால்சியம் கற்கள் கூட உருவாகின்றன.
தண்ணீர் vs கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்
மொத்தம் 13 வைட்டமின்கள் உள்ளன. அவை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை தண்ணீர் மற்றும் கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்கள். இது குறித்து சுகாதார நிபுணர்களின் மேலும் கூறுகையில், நீரில் கரையக் கூடிய விட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது, அவை வெளியேற்றப்பட்டு உடல் திசுக்களில் சேமிக்கப்படுவதில்லை. எனவே, நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் பின்வருமாறு:
வைட்டமின் பி1 (தியாமின்)
வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்)
வைட்டமின் B3 (நியாசின்)
வைட்டமின் B5 (பாந்தோதெனிக் அமிலம்)
வைட்டமின் B6 (பைரிடாக்சின்)
வைட்டமின் B7 (பயோட்டின்)
வைட்டமின் B9 (ஃபோலேட்)
வைட்டமின் பி12 (கோபாலமின்)
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்
இவை தண்ணீரில் கரையாது மற்றும் உடலின் திசுக்களில் எளிதில் சேமித்து, இறுதியில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
நான்கு கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன:
வைட்டமின் ஏ
வைட்டமின் டி
வைட்டமின் ஈ
வைட்டமின் கே
மேலும் படிக்க | வலுவான நரம்புகள் முதல் எடை இழப்பு வரை... பாஸ்மதி அரிசியை ‘இப்படி’ சாப்பிடுங்க..!
வைட்டமின் நச்சுத்தன்மையின் அறிகுறிகள்
வைட்டமின் நச்சுத்தன்மை, சருமத்தை கடுமையாக பாதிக்கலாம், இதனால் சிவத்தல், எரிச்சல் மற்றும் சருமம் உதிர்தல் போன்றவை ஏற்படும். நாள்பட்ட மற்றும் அதிகப்படியான கூடுதல் பயன்பாடு மேலும் சில அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், அவற்றுள்:
1. மண்டை ஓட்டில் அழுத்தம் மாற்றங்கள்
2. பார்வை குறைபாடு
3. குமட்டல்
4. மயக்கம்
5. ஒற்றைத் தலைவலி
6. எலும்பு வலி
7. கல்லீரல் பாதிப்பு
8. கோமா
9. இறப்பு
அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
வைட்டமின் ஏ (Vitamin A)
அதிகப்படியான விட்டமின் ஏ மாத்திரைகள் காரணமாக, நச்சுத்தன்மை, அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் மாத்திரைகள் அதிக அளவு சாப்பிடுவதால் இது ஏற்படும். இதற்கான அறிகுறிகளில் வாந்தி, அதிகரித்த உள்விழி அழுத்தம் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் B3 (Vitamin B3)
வைட்டமின் B3 நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது. நிகோடினிக் அமிலமாக எடுத்துக் கொள்ளும் நிலையில், நியாசின் தினமும் 1-3 கிராம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதிக ரத்த அழுத்தம், வயிற்று வலி, பார்வை இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் B6 (Vitamin B6)
வைட்டமின் பி6 பைரிடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு அதிகப்படியான அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, கடுமையான நரம்பியல் அறிகுறிகள், தோல் புண்கள், ஒளியின் உணர்திறன் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும், அவற்றில் சில ஒரு நாளைக்கு 1-6 கிராம் வரை ஏற்படும்.
வைட்டமின் B9 (Vitamin B9)
வைட்டமின் B9, ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சப்ளிமெண்டாக அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் மன ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
வைட்டமின் பி12 ( Vitamin B12)
வைட்டமின் பி 12 ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்.
வைட்டமின் சி (Vitamin C)
வைட்டமின் சி மற்ற ஊட்டச்சத்துக்களை விட குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்புகள் மற்றும் வாந்தி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் டி (Vitamin D)
வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான நச்சுத்தன்மை எடை இழப்பு, பசியின்மை மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது இரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கலாம்., இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.
வைட்டமின் ஈ (Vitamin E)
நீங்கள் அதிகப்படியான வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால், அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு மற்றும் ஹெமோர்ஹாஅஜிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் கே (Vitamin K)
வைட்டமின் கே அதிகமாக இருந்தால், நச்சுத்தன்மை எற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இது வார்ஃபரின் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற சில மருந்துகளுடன் சேர்ந்தால் எதிர் வினை புரியலாம்.
மேலும் படிக்க | காலி வயிற்றில் பழம் ஜூஸ் குடிப்பீங்களா... இந்த செய்தி உங்களுக்கு தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ