நீரிழிவு நோய் ஏற்பட்டால், உடலின் ஆற்றல் குறைந்து உடல் அதிக அளவு சோர்வடைகிறது.
கண் பார்வையில் பிரச்சனைகள் வருவது நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு நீரிழிவு நோயின் பெரிய அறிகுறியாக கருதப்படுகின்றது.
காரணமே இல்லாமல் உடல் எடை திடீரென குறைந்தால் அதற்கு நீரிழிவு நோயும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது தோல் தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.
பொதுவாக, உடலில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்தம் தொடங்குகிறது.
சர்க்கரையும் குளுக்கோஸும் உடலில் ஒரே இடத்தில் சிக்கிக்கொள்வதால், உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு, அதை சரி செய்ய பசி அதிகமாகிறது.
இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியமாகும்.