பணத்தை முதலீடு செய்ய தபால் அலுவலக திட்டங்கள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. குறைந்த ரிஸ்க் எடுத்து அதிக வட்டியை விரும்புபவர்களுக்கு தபால் நிலையத் திட்டம் சிறந்தவையாக இருக்கும்.
தபால் நிலையங்கள் நாடு முழுவதும் பத்து சிறு சேமிப்பு திட்டங்களை கொண்டுள்ளன. இவற்றில் 7 சதவிகிதத்தை விட அதிக வட்டி விகிதம் கொண்ட திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2% ஆண்டு வட்டி கிடைக்கிறது
செல்வமகள் சேமிப்புத் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனாவில் 8% கிடைக்கிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழான NSC -இல் 7.7% வட்டி கிடைக்கிறது
கிசான் விகாஸ் பத்ராவில் 7.5% வட்டி கிடைக்கிறது
மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழில் 7.5% வட்டி கிடைக்கிறது
பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1% வட்டி கிடைக்கிறது