இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தற்போதைய மற்றும் 25வது கவர்னராக சக்திகாந்த தாஸ் பணியாற்றி வருகிறார்.
முந்தைய நிதியாண்டில் கவர்னர் சக்திகாந்த தாஸின் மாதச் சம்பளம் ரூ. 2.5 லட்சமாக இருந்தது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரின் மாதச் சம்பளம் ரூ.2.25 லட்சம். மத்திய வங்கியில் தற்போது நான்கு பிரதி ஆளுநர்கள் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர்கள் 2022 நிதியாண்டின் இறுதியில் மாதச் சம்பளமாக ரூ.2.16 லட்சத்தை பெற்றனர்.
சம்பளம் தவிர, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அரசு தங்குமிடம், பணியாளர்கள், கார் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.
டிசம்பர் 12, 2018 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக தாஸ் பொறுப்பேற்றார்.
தாஸ் கடந்த 38 ஆண்டுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில்கள், உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிர்வாகத்தில் பெரும் அனுபவம் பெற்றவர்.
தாஸ் தமிழ்நாடு கேடரில் 1980 பேட்ச் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.