பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புக்கான விதிகளை கட்டாயமாக்கியுள்ளது.
நீங்களும் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிஎன்பி போன்றவற்றின் வாடிக்கையாளராக இருந்தால், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காமல் போனால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.
எஸ்பிஐ (SBI) குறைந்தபட்ச இருப்பு: கிராமப்புறங்களில் - ரூ. 1000, செமி நகர்ப்புறங்களில் ரூ. 2,000, நகர்ப்புறங்களில் ரூ.3,000 கட்டாயம்.
எச்டிஎஃப்சி வங்கி குறைந்தபட்ச இருப்பு: கிராமப்புறங்களில் - ரூ. 2,500, செமி நகர்ப்புறங்களில் ரூ. 5,000, நகர்ப்புறங்களில் ரூ.10,000 கட்டாயம்.
ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச இருப்பு: அர்பன் கிளைகளில் - ரூ. 10,000, செமி அர்பன் - ரூ. 5,000, ரூரல் - ரூ.2,000, கிராமப்புறங்களில் - ரூ.1,000 கட்டாயம்.
கனரா வங்கி குறைந்தபட்ச இருப்பு: அர்பன் கிளைகளில் - ரூ. 2,000, செமி அர்பன் - ரூ. 1,000, ரூரல் - ரூ.500 கட்டாயம்.
AXIS வங்கி குறைந்தபட்ச இருப்பு: நகர்ப்புறங்களில் - ரூ. 12,000, செமி அர்பன் - ரூ. 5,000, ரூரல் - ரூ.2,500 கட்டாயம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்தபட்ச இருப்பு: மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் - ரூ.5000, செமி அர்பன் - ரூ. 2,000, கிராமப்புறங்களில் - ரூ. 1,000 கட்டாயம்.