நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் மோடி 15வது தவணையை 8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், சில விவசாயிகளின் கணக்கில், தவணைத்தொகையான 2000 ரூபாய்க்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
வழக்கமாக பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் ஒரு தவணையில் 2000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும். ஆனால், இந்த முறை அந்தத் தொகையில் வித்தியாசம் உள்ளது
சில விவசாயிகளுக்கு 15 வது தவணையில் ரூ. 6 ஆயிரம் வரை பணம் போடப்பட்டுள்ளது, அதாவது வழக்கமான தவணைத்தொகையை விட மும்மடங்கு தொகை கணக்கிற்கு வந்துள்ளது
15வது தவணையில் சிலருக்கு 4 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்துள்ளது. அதிக பணம் வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்
ஒரு சில காரணங்களால் சில விவசாயிகளின் வங்கி கணக்குகளில் PM கிசானின் 13 வது தவணை மற்றும் 14 வது தவணைப் பணம் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது.
நிலுவை தொகை யாருக்கெல்லாம் பாக்கி இருந்ததோ, அந்த விவசாயிகளுக்கு தற்போது பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 15வது தவணையுடன் சேர்த்து ஒரு தவணை பாக்கி இருந்தவர்களுக்கு 4000 ரூபாய் மற்றும் 2 தவணைகள் நிலுவையில் இருந்தவர்களுக்கு 6000 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது