NPS Vatsalya சிறார்களுக்காக துவங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஓய்வூதிய திட்டமாகும்.
இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ஜூலை 23 அம் தேதி மத்திய பட்ஜெட்டில் மோடி 3.0 அரசாங்கம் வெளியிட்டது.
இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சிறார்களுக்காக என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம்
இந்தத் திட்டத்தில் ஒருவர் மொத்தமாகவோ அல்லது மாதாந்திர முதலீடாகவோ முதலீடு செய்யலாம். சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த திட்டத்தில், குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு ரூ. 1,000 ஆகும்.
சிறாருக்கு 18 வயது ஆனதும் இந்த கணக்கு சாதாரண NPS கணக்காக மாற்றப்படும். அவர்கள் 75 வயதாகும் வரை தங்கள் NPS கணக்கில் தொடர்ந்து பங்களிக்கலாம்.
குழந்தைகள் மத்தியில் நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு ஆகிய பழக்கங்களை ஊக்குவித்து அவர்களது எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
NPS Vatsalya திட்டத்தின் மூலம் சிறார்களின் எதிகாலத்திற்கு பெற்றோர் / பாதுகாவலர் ஒரு பெரிய கார்பஸ் தொகையை உருவாக்க முடியும்.