ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சந்தாதாரர்களுக்கான NPS திரும்பப் பெறும் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
என்பிஎஸ் உறுப்பினர்களுக்கு இனி SLW அதாவது சிஸ்டமடிக் லம்ப்சம் வித்ட்ராயல் வசதி கிடைக்கும் என PFRDA கூறியுள்ளது.
சந்தாதாரர்கள் படிப்படியாக மொத்த தொகையை எடுக்கும் வசதியை என்பிஎஸ் அளிக்க வேண்டும் என PFRDA பரிந்துரைத்துள்ளது.
தற்போதுள்ள விதிகளின் படி 60 வயதானவுடன் அல்லது சூப்பரானுவேஷன் முதல் 75 வயது வரை வருடாந்திர அடிப்படையில் பனத்தை பெறும் வசதி உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மொத்த பனத்தை எடுக்கலாம், அல்லது வருடாந்திர தொகையை பெறலாம். வருதாந்திர தொகை பெற ஒவ்வொரு முறையும் வித்ட்ராயல் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
புதிய விதிகளின் படி சந்தாதாரர்களுக்கு படிப்படியாக மொத்த தொகையை எடுக்கும் வசதி கிடைக்கும்.
இப்போது 75 வயதாகும் வரை கார்பசின் 60% தொகையை மாதாந்திர, 3 மாத, 6 மாத அல்லது வருடாந்திர அடிப்படையில் எடுக்கலாம்.