தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் முக்கிய சில அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தபால் நிலைய சேமிப்புத் திட்டத்தின் தொகை குறைந்தபட்ச வரம்பான ரூ.500 -ஐ விட குறைவாக இருந்தால், நிதி ஆண்டின் முடிவில் பராமரிப்பு கட்டணமாக ரூ.50 கழிக்கப்படும்.
டூப்ளிகேட் பாஸ்புக், அதாவது பாஸ்புக் நகலை பெற ரூ.50 செலுத்த வேண்டும்.
அகவுண்ட் ஸ்டேட்மெட் அதாவது கணக்கு அறிக்கை அல்லது டெபாசிட் ரசீதுகளை பெற ரூ.20 செலுத்த வேண்டும்,
கணக்கு பரிமாற்றம் மற்றும் அகவுண்ட் ப்ளெட்ஜுகளுக்கு ரூ.100 கட்ட வேண்டும்.
நாமினியின் பெயரை மாற்றவோ அல்லது கேன்சல் செய்யவோ ரூ.50 செலுத்த வேண்டும்.
ஒரு வருடத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் 10 காசோலை பக்கங்களை (Chequebook Leaves) பயன்படுத்தலாம். அதன் பிறகு ரூ2 வசூலிக்கப்படும்,