VPF என்பது EPF இன் தொடர்ச்சியாக கருதப்படுகின்றது. இது ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது.
EPF போலவே, VPF பங்களிப்புகளும் கூட்டு வட்டி பலனைப் பெறுகின்றன. விபிஎஃப் சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்தை முடிப்பதற்கு முன் பணத்தை எடுத்தால், அதற்கு வரி விதிக்கப்படும்.
பணி ஓய்வு, ராஜினாமா போன்ற சந்தர்ப்பங்களில் EPF போலவே VPF நிதியும் வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், இபிஎஃப் போலவே நாமினிக்கு தொகை அளிக்கப்படுகின்றது.
முன்னர் EPF பங்களிப்புகளில் பெறப்படும் முழு வட்டிக்கும் வரி இல்லாமல் இருந்தது. எனினும், இந்த விதி, பின்னர் மாற்றப்பட்டது.
இப்போது ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சம் வரையிலான ஊழியர்களின் பங்களிப்புக்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ரூ.2.5 லட்சம் வரம்பு EPF மற்றும் VPF இரண்டையும் உள்ளடக்கியது.
ஒருவர் EPF மற்றும் VPF இல் ஆண்டுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் (மாதம் ரூ.20,833) முதலீடு செய்தால், 8.25% வருடாந்திர வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3.3 கோடியைப் பெறுவார்.
EPF மற்றும் VPF இல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல தொகையை பெற முடியும். பிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை அவ்வப்போது எடுக்காமல் இருந்தால், கோடிகளில் கார்ப்பஸ் பெறலாம்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.