யமாஹா ஸ்கூட்டி வாங்கியிருந்தால் உடனே திருப்பி கொடுங்கள்..!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் மிகவும் பிரபலமான யமஹா நிறுவனம் 3 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
யமஹா அதன் 125 cc ஸ்கூட்டர் மாடல்களான Ray ZR 125 Fi ஹைப்ரிட், Fascino 125 Fi ஹைப்ரிட் ஆகிய 300,000 இருசக்கர வாகனங்களை திரும்ப பெற உள்ளனர்.
அந்த வாகனங்களில் பிரேக் பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை சரி செய்ய பிறகு இருசக்கர வாகனங்கள் திரும்ப வழங்கப்படும்
2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில் இந்த பிரச்னை இருக்கிறது.
பிரச்னை உள்ள வாகனங்களில் உதிரி பாகங்கள் மாற்றப்பட்டு, அந்த பிரச்னை சரி செய்யப்படும் என யமாஹா அறிவிப்பு
இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் பிரச்னை உள்ள வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று வாகனத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்
யமாஹா நிறுவனத்தின் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்து சேவையை பெறலாம் என தெரிவித்துள்ளது.