யுபிஐ லைட் (UPI Lite) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பரிவர்த்தனை வரம்பை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
முன்னர் UPI123Pay மூலம் பயனர்கள் ஒரு நேரத்தில் 5000 ரூபாய் வரை மட்டும்தான் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
தற்போது இந்த வரம்பு ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, UPI லைட் வாலட் மூலம் ஒரே நேரத்தில் ரூ.500 மட்டுமே அனுப்ப முடியும் அல்லது பெற முடியும். மொத்தமாக இதில் ரூ.2000 வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
இப்போது UPI லைட்டின் பயன்பாட்டை அதிகரிக்க, அரசாங்கம் Wallet வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது ஒரே நேரத்தில் ரூ. 1000 வரை அனுப்பலாம் அல்லது பெறலாம். மேலும் மொத்தமாக வாலட்டில் ரூ.5000 வைத்திருக்கலாம்.
UPI லைட் தொடங்கப்பட்டபோது சில விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. இப்போது இந்த விதிகளும் மாற்றப்படும்.
யுபிஐ, நாட்டு மக்களின் பண பரிமாற்றம் மற்றும் கட்டணங்களை செலுத்தும் வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.