இந்த வகை ஃபண்ட்களில் முதலீடு செய்தால் முதலாண்டில் 35.37% வருமானத்தையும், மூன்றாண்டில் 16.51%, ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 15.65 சதவீத வருமானத்தையும் தருவது வழக்கம்
லார்ஜ்-கேப் ஃபண்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வருமானத்தின் அடிப்படையில் சிறந்த பரஸ்பர நிதிகளாக உள்ளன
20,000 ரூபாயை 10.52 லட்சமாக உயர்த்திய லார் கேப் ஃபண்ட் திட்டங்களைத் தெரிந்துக் கொள்வோம். மூன்று வருட காலப்பகுதியில் 49.54 சதவீதத்துடன் ஃபண்ட் பிரிவில் முதலிடத்தில் உள்ள எஸ்.ஐ.பிகள் இவை...
49.54 சதவீத SIP வருமானத்தின் (XIRR) அடிப்படையில் ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட் முதலிடத்தில் உள்ளது.
இது இரண்டாவது நிலையில் உள்ள அருமையான முதலீட்டுத் திட்டம் ஆகும். மூன்று ஆண்டுகளில் 48.31 சதவீத SIP வருமானத்தை அளித்துள்ளது.
பரோடா பிஎன்பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் நேரடி வளர்ச்சி எஸ்.ஐ.பி திட்டம், மூன்றாண்டுகளில் 44.45 சதவீத வருமானத்தை அளித்துள்ளது
மூன்றாண்டு காலத்தில் 42.47 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. நிஃப்டி 100 டிஆர்ஐக்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட ஃபண்ட் இது
ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் நேரடி வளர்ச்சி ஃபண்ட், மூன்றாண்டு காலத்தில் 40.97 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.