வங்கி என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது எஸ்பிஐ தான். பல்வேறு வங்கிகளும், திட்டத்திற்கு ஏற்றாற்போல வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன. அதில் எஸ்பிஐயின் அருமையான திட்டங்கள் இவை...
400 நாட்களுக்கு வைக்கும் 'அம்ரித் கலாஷ்' FDக்கு 7.6 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. இந்த சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ப்வர்கலுக்கு 7.10% வட்டி விகிதம் கிடைக்கும். எஸ்பிஐயின் சிறப்பு FD திட்டமான இதில் 31 மார்ச் 2024 வரை முதலீடு செய்யலாம்
மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக இந்த திட்டத்தில் 31 மார்ச் 2024 வரை டெபாசிட் செய்யலாம்.5 முதல் 10 ஆண்டுகள் வரை டெபாசிட்களுக்கு 7.50 சதவீதம் வட்டி கிடைக்கும். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு, 3.5 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படுகிறது
SBI கிரீன் டெபாசிட்டில், மூத்த குடிமக்களுக்கு 1111 நாட்கள் மற்றும் 1777 நாட்களுக்கு 7.15 சதவீத வட்டியும், 2222 நாட்களுக்கு 7.40 சதவீத வட்டியும் கிடைக்கும். 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு 1111 நாட்கள் மற்றும் 1777 நாட்களுக்கு 6.65% வட்டியும், 2222 நாட்கள் சில்லறை டெபாசிட்டுகளுக்கு 6.40% வட்டி கிடைக்கும்.
ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடத்திற்கான இந்த வைப்பு நிதித் திட்டமான எஸ்பிஐ பெஸ்ட் திட்டத்தில், 2 வருட டெபாசிட்டுக்கு 7.4 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது
எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தில் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் அசல் தொகையின் ஒரு பகுதியுடன் வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டியானது வங்கியின் FD வட்டிக்கு சமமானதாக இருக்கும். இந்த ஆனியுடி வைப்புத் திட்டத்தில், 36, 60, 84 அல்லது 120 மாதங்களுக்கு டெபாசிட் செய்யலாம்.
எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் காணப்படும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இதில் உள்ள தகவல்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது