இதற்காக கடன் வாங்கினால் தப்பில்லை..! ஏன் தெரியுமா?
பொதுவாக நம்முடைய தேவைக்கு நம்மிடம் பணம் இல்லாத பட்சத்தில் பிறரிடம் இருந்து வாங்கும் பணம் கடன் ஆகும்.
இன்று நம்மில் பலருக்கு கடன் வாங்குவதற்கு அச்சம். ஆனால் இ.எம்.ஐ வாங்குகிறோம்.ஏன்னென்றால் இ.எம்.ஐ என்பது தவனை முறையில் இருப்பதால் அதனை ஒரு பெரிய கடனாக நாம் பார்பதில்லை.
ஆனால் கடன் வாங்கினால் தவறு என்று நினைக்கிறோம். ஆனால் கடன் என்பதிலே கடன் மற்றும் நல்ல கடன் என்று இரண்டு வகை உண்டு.
நல்ல கடன் என்று சொல்லப்படுவது நாம் ஒருவரிடம் ஒரு லட்சம் பணமாகவோ அல்லது இ.எம்.ஐ யாகவோ வாங்கி அதை நமக்கு இலாபம் தரக்கூடிய அல்லது மாதம் மாதம் தொடர்ந்து நாம் பணம் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டிய தொகையை விட அதிகமான வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் தொடங்குவது நல்ல கடன் ஆகும்.
ஏன் இதை நல்ல கடன் என்று சொன்னால் இப்படி நாம் செய்ய கூடிய தொழில் அல்லது வருமானம் தரும் வகையில் வாங்கும் பொருட்கள் நாம் வாங்கிய தொகையை கட்டி முடித்த பிறகும் நமக்கு நாம் தொடங்கிய தொழில் அல்லது பொருள் நிலையான ஒரு வருமானம் தந்து கொண்டே தான் இருக்கும் .
எனவே தான் இது நல்ல கடன் ஆகும். கடன் வாங்குவது தவறான ஒன்று அல்ல அதிலும் நல்ல கடன் வாங்குவது நன்று.