சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகித மாற்றம் குறித்த தகவலை அளித்தார்.
பல்வேறு சிறுசேர்மிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரங்களை இந்த பதிவில் கா
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தேசிய சேமிப்புச் சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
செல்வமகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
கிசான் விகாஸ் பத்ரவில் 7.2 (120 மாதங்கள்) இலிருந்து 7.5 (115 மாதங்கள்) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், அரசாங்கம் வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதாவது, பிபிஎஃப் -இல் முன்னர் கிடைத்துவந்த அதே பலன்கள் கிடைக்கும்.