அனைவரும் பணத்தை பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய தோடு, சிறந்த வருமானத்தையும் பெற வேண்டும் எனவும் விரும்புவார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP என்பது பெரிய அளவில் நிதியை சேமிப்பதற்கு ஒரு சிறந்த தேர்வு. அதில் முதலீடு செய்வதன் மூலம் 21 ஆண்டுகளில் கோடீஸ்வரரர் ஆகலாம்.
SIPயின் நீண்ட கால முதலீடுகளுக்கு கிடைத்த வருமானம் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே வந்துள்ளது. சராசரியாக, வருவாய் விகிதம் 12 முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது.
பரஸ்பர நிதியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும், மீண்டும் திட்டமிட்டு முதலீடு செய்வது பல கோடி ரூபாய் சேர்க்க உதவுகிறது.
ரூ 2 கோடி வரை பணம் சேர்க்க, மாதத்திற்கு ரூ. 10,000 என்ற அளவில் 21 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மொத்தத் முதலீட்டு தொகை ரூ.25,20,000 ஆக இருக்கும்.
சராசரியாக 16 சதவிகிதம் வருமானம் என எடுத்துக் கொண்டால், வருமானம் ரூ.1,81,19,345 ஆக இருக்கும். இதன்படி 21 ஆண்டுகளில் உங்கள் மொத்த நிதி ரூ.2,06,39,345 ஆக இருக்கும்.
பங்குச் சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பரஸ்பர நிதிகள் மீது முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.