அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுக்கு ஒரு சிறந்த வழியாக உள்ளது.
இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான திட்டமாகும். 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் (VRS) இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்
மூத்த குடிமக்கள் (Senior Citizens) SCSS கணக்கை வங்கிகள் அல்லது தபால் அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் திறக்கலாம்.
SCSS கணக்கு தொடங்க குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை, ரூ.1,000 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இது பல சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம், அதாவது மாதா மாதம் ரூ.20,500 வட்டி கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களின் பணத்துக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.