முதலீடுகளில், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund).
PPF என்பது வரிச் சலுகையுடன் கூடிய திட்டம். இதில் உத்தரவாதத்துடன், வரி இல்லாத வருமானம் கிடைக்கும். இத்துடன் வருமான வரி விலக்கும் உண்டு.
நீங்கள் விரும்பினால், உங்கள் மைனர் குழந்தையின் பெயரிலும் PPF கணக்கைத் திறக்கலாம்.
ஒரு வருடத்தில், அதிகபட்சமாக குழந்தையின் கணக்கில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்லாம்.
PPF கணக்கின் மிகப்பெரிய நன்மை 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் ஆகும். அதாவது, முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.
உங்கள் குழந்தை வயது வந்தவுடன் தான், கணக்கை அவர்கள் செயல்படுத்தலாம்.
பிபிஎஃப் கணக்கு தொடங்க, அரசின் அங்கீகாரம் பெற்ற தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளுக்குச் சென்று உங்கள் கணக்கைத் திறக்கலாம்.
PPF கணக்கின் வட்டி விகிதம் என்ன என்பதை அவ்வபோது அரசு முடிவு செய்து அறிவிக்கும். இருப்பினும், வங்கி முதலீடுகளை காட்டிலும் பொது அதிக வட்டி கிடைக்கும்.