ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் MCLR மற்றும் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் பேஸ் ரேட் 0.15 சதவீதமும், MCLR விகிதம் 0.10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
எம்சிஎல்ஆர் என்பது ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான குறைந்தபட்ச கடன் அளவாகும்.
தற்போது கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள், அதிக விகிதத்தில் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எம்சிஎல்ஆர் விகிதம் கடன் வகை, கடன் பெறும் விண்ணப்பதாரர், கடன் காலம், சிபில் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகமாகும்.
எம்சிஎல்ஆர் அளவீட்டில், ஒரு வருடத்திற்கு 8.65 சதவீதமாகவும், 2 வருடத்திற்கு 8.75 சதவீதமாகவும், 3 வருடத்திற்கு 8.85 சதவீதமாகவும் இருக்கும்
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடனுக்குச் சுமார் 0.65 சதவீதம் வரையில் வட்டியில் தள்ளுபடி அளிக்கிறது.
புதிய வட்டி விகிதம் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கும், கடன் வாங்கி ஒரு வருடத்திற்கும் குறைந்த காலகட்டமே ஆன வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது.