இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் அவை அழுக்காவதும் சிதைந்து போவதும் மிகவும் பொதுவானது.
ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் சிதைந்த நோட்டுகளை ஏற்கமும் மாற்றவும் மறுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்ற வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
கரன்சி நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது ரூபாய் நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேலான துண்டுகளாக கிழிந்து இருந்தாலோ அது சிதைந்த நோட்டாக கருதப்படுகின்றது
அழுக்கான மற்றும் சிதைந்த நோட்டுகளின் மதிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் சொந்த விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது
50 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள நோட்டுகள்: 50 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், முழு மதிப்பு கிடைக்கும், 50 சதவீதத்துக்கு மேல் நோட்டு சேதமடைந்திருந்தால் நீங்கள் மாற்றிய நோட்டுக்கு பதிலாக ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
ரூ.500 நோட்டின் நீளம் 15 செ.மீ., அகலம் 6.6 செ.மீ, பரப்பளவு 99 சதுர செ.மீ: ரூ.500 நோட்டின் அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகை, 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகை