ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஐஓசிஎல் உள்ளிட்ட பல எண்ணெய் நிறுவனங்கள் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 1 முதல் "100 டேய்ஸ் 100 பே" பிரச்சாரத்தை நடத்த உள்ளது. இதன் கீழ் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் கண்டறியப்படும். இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மே 21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தொழில்துறை அமைச்சகம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக ஜூன் மாதம் முதல் மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அல்லது வாரத்தில் இருந்து சிஎன்ஜி - பிஎன்ஜி விலையிலும் மாற்றம் இருக்கும். பெட்ரோலிய நிறுவனங்கள் டெல்லி மற்றும் மும்பையில் விலையை மாற்றி அமைக்கின்றன. இந்த முறையும் அவற்றின் விலை மாறக்கூடும்.
ஜூன் 1 முதல் இபிஎஃப்ஓ விதிகளில் மாற்றம் இருக்கும். இந்த விதியின்படி, இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பிஎஃப் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம்.
புதிய ஐடிஆர் இணையதளம் ஜூன் 7 முதல் தொடங்கப்படும். அதாவது ஜூன் 1 முதல் 6 வரை இந்த இணையதளத்தை உங்களால் பயன்படுத்த முடியாது.
பாங்க் ஆஃப் பரோடாவும் அதன் விதிகளை மாற்றப் போகிறது. உங்களுக்கும் இந்த வங்கியில் கணக்கு இருந்தால், ஜூன் 1 முதல், காசோலை செலுத்தும் விதியை வங்கி மாற்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது தவிர, சிறு சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களையும் அரசாங்கம் மாற்றக்கூடும். மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்கிறது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தை ஹால்மார்க் செய்வது தொடர்பான விதிகளும் அமல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் மே 31 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்படும்.