பொதுவாகவே மூத்த குடிமக்களுக்கு, அனைத்து வங்கிகளும் பொதுமக்களுக்கு கொடுக்கும் வட்டியை விட அதிக அளவிலேயே வட்டியை வழங்குகின்றன.
மூத்த குடிமக்களுக்கு 15 மாத காலத்திற்கான நிலையான வைப்பு நிதிக்கு 7.10 முதல் 7.75% வட்டி கிடைக்கிறது.
மூத்த குடி மக்களுக்கு ஐ சி ஐ சி ஐ வங்கி FD கணக்குகளுக்கு 7. 25 சதவீத வட்டி கொடுக்கிறது.
SBI வங்கி மூத்த குடிமக்களுக்கான எப்படி கணக்கிற்கு 7.3% முதல் 7.5% வரை வட்டி வழங்குகிறது.
கோடக் மகேந்திரா வங்கி, முதலீடுகளின் அளவு மற்றும் காலத்தை பொறுத்து, 6.7 சதவீதம் முதல் 7.8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆப் பரோடா வங்கியும் 7.35% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள வட்டி விகிதம், மாறுதலுக்கு உட்பட்டது. வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. எனவே முதலீடு செய்யும் முன் மீண்டும் ஒருமுறை விவரங்களை சரி பார்க்கவும்.