ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது.
மே 23, 2023 முதல், ரூ.2,000 நோட்டுகளை அருகிலுள்ள வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் திரும்பப் பெறும் வசதியும் கொடுக்கப்பட்டது.
மார்ச் 31, 2023 வரையிலான தரவுகளின்படி, நாட்டில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் சந்தையில் இருந்தன என்று ரிசர்வ் வங்கி கூறியது.
செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள், இந்த நோட்டுகளில் 96 சதவீதம் என்ற அளவில், வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மூலம் திருப்பி வந்துள்ளன என்றும ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
முதலில் ரூபாய் நோட்டுக்களை டெபாஸிட் செய்வதற்கான காலக்கெடு செப்டெம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பின்னர் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது
அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்பிலான உள்ள நோட்டுகளை ஒரே நேரத்தில் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.