சமையலறையில் மசாலாப் பொருட்களை வைத்திருப்பது வீட்டிற்கு சுபிட்சத்தையும் வளத்தையும் தரும்
வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு சில பொருட்கள் நமது வீட்டில் குறையாமல் இருக்க வேண்டும். அவற்றை எங்கு எப்படி வைப்பது என்று தெரிந்துக் கொண்டால் வளமுடன் வாழலாம்
இந்த மசாலாப் பொருட்களை சமையலறையில் வைத்திருப்பது உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றும்
செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என்று நம்பப்படும் ஏலக்காய், வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். தினமும் ஏலக்காயை மென்று சாப்பிட்டால், அது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது
இலவங்கப்பட்டையை உங்கள் பணப்பையில் வைத்திருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் நிதி ஆதாயத்தையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும்.
குரு பகவானுடன் தொடர்புடைய மஞ்சள் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். தினமும் மஞ்சளை சமையலில் சேர்த்துக் கொள்கிறோம். மஞ்சள் பயன்பாடு, தீய சக்திகளை விலக்கி, உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்
பணப்பையில் அல்லது சாமி அறையில் கிராம்பு வைத்திருப்பது, வாழ்விலும் வீட்டிலும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும், கண் திருஷ்டியை போக்கும் சக்தி கிராம்புக்கு உண்டு.
வீட்டில் எதிர்மறை ஆற்றலைப் போக்கி, ஆக்கப்பூர்வமான நேர்மறையான ஆற்றல் அதிகரிக்க சாம்பிராணி புகை போடுவது நல்லது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை