ஓய்வு காலத்தில் மக்கள் நிதி பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் இருக்க அரசால் தொடங்கப்படட் திட்டம் தான் தேசிய ஓய்வூதியத் திட்டம்.
பாதுகாப்பான ஓய்வு காலத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம்.
இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இதனால், வயதான காலத்தில் எந்த வித பண போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை கழியும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட குடிமக்கள் தங்கள் முதலீட்டு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
துவக்க நிலையிலேயே இதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், அதிக லாபம் எளிதில் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பிரீமியமாக 30 ஆண்டுகளுக்கு செலுத்தினால், மாத ஓய்வூதியமாக (Pension) ரூ.1 லட்சம் கிடைக்கும்.
சரியாக திட்டமிட்டு இதில் முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது, பாதுகாப்பான வழியில் ஒரு கோடி ரூபாயை எளிதாகப் பெறலாம்.
ஒருவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவரது பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் 5 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.