ITR Filing: முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு ஈசி செக்லிஸ்ட்

Sripriya Sambathkumar
Jul 30,2024
';

வருமான சான்றுகள்

ஐடிஆர் தாக்கல் செய்யத் தொடங்கும் முன், வங்கி அறிக்கைகள், முதலீட்டு விவரங்கள், சம்பள சீட்டுகள் மற்றும் பிற வருமான சான்றுகள் உள்ளிட்ட அனைத்து நிதி ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

';

வருமானம்

சம்பளம், ஃப்ரீலான்ஸ் வருமானம், வாடகை வருமானம் மற்றும் பிற ஆதாரங்கள் மூலமாக வரும் வருமானம் அனைத்தையும் தெளிவாக தெரியப்படுத்தவும்.

';

ஐடிஆர் படிவங்கள்

பல்வேறு வகையான வரி செலுத்துவோருக்கு பல்வேறு ஐடிஆர் படிவங்கள் (ITR Forms) உள்ளன. சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

';

வரி முறை

பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறைகளில் (New Tax Regime) உங்களுக்கு ஏற்ற வரி முறையை தேர்வு செய்வது அவசியமாகும்.

';

Form 16A

விலக்குகளைப் பெறுவதற்கும், தேவையானதை விட அதிக வரி செலுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் Form 16A முக்கியமானது. இதை கவனமாக மதிப்பாய்வு செய்து, பொருந்தக்கூடிய விலக்குகளைப் பெற உங்கள் ITR ஐத் தாக்கல் செய்யும் போது அதைப் பயன்படுத்தவும்.

';

வருமான வரி கணக்கு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. இதற்குள் ஐடிஆர் தாக்கல் செய்வது மிக அவசியமாகும்.

';

ஐடிஆர் ரீஃபண்ட்

அதிக வரி செலுத்தியிருந்தால், உங்கள் ITR ஐ தாக்கல் செய்து மீதமுள்ள வரியை திரும்பப் பெற முடியும். உங்கள் வரி பொறுப்பை மீறும் தொகைக்கான TDS அல்லது அட்வான்ஸ் டேக்ஸ் பேமெண்டுகள் இருந்தால், எளிதாக ஐடிஆர் ரீஃபண்ட் பெறலாம்.

';

வருமானச் சான்று

ஐடிஆர் உங்கள் வருமானத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாக செயல்படுகிறது. இது நிதி பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்ல, விசா விண்ணப்பங்கள் மற்றும் வருமானச் சான்று தேவைப்படும் பிற சட்ட நடைமுறைகளுக்கும் பயனளிக்கிறது.

';

ஐடிஆர் தாக்கல்

பான் கார்டு, ஆதார் அட்டை, படிவம் 16/16A (டிடிஎஸ் சான்றிதழ்கள்), வங்கி அறிக்கைகள்/பாஸ்புக், முதலீட்டுச் சான்றுகள் (மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் போன்றவை), சொத்து ஆவணங்கள், வரி சேமிப்பு முதலீடுகளின் ரசீதுகள் (ELSS, PPF போன்றவை)

';

VIEW ALL

Read Next Story