நடுத்தர வர்க்கத்தினருக்கு, எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது என்பது எப்போதுமே சவாலான விஷயமாகவே இருக்கும்.
சில உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த முறையில் பணத்தை சேமிக்கலாம்.
உங்களது சம்பளம் ரூபாய் 30,000 முதல் 50,000 என்ற அளவில் இருந்தால், எந்த அளவிற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எதிர்கால பாதுகாப்பிற்காகவும், பொருளாதார நிலை உயரவும், பணத்தை சேமிக்க 50 : 30 : 20 ஃபார்முலா கை கொடுக்கும்.
உங்கள் சம்பளத்தின் 50 சதவீதத்தை வீட்டு செலவுகளுக்கும் இதர செலவுகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
சம்பளத்தின் 30 சதவீதத்தை, பொழுதுபோக்கு மற்றும் குடும்ப மகிழ்ச்சிக்காக செலவழிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
சம்பளத்தின் மீதமுள்ள 20% சேமிப்புக்காக பயன்படுத்த வேண்டும்.
PPF, அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள், போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், வரிவிலக்கின் பலனையும் பெறலாம்.
பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வதும் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த வழிமுறை. தற்போது சராசரியாக பரஸ்பர நிதியத்தில் 15% வருமானம் கிடைக்கிறது.